Perambalur: VCK district general council meeting; statement from District Secretary N. Krishnakumar!

பெரம்பலூரில் நடைபெறவுள்ள மாவட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு, விசிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் அழைப்பு விடுத்துள்ளார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள சின்னமணி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் வரும் பிப்.9 அன்று காலை 10 மணி அளவில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. விசிக மாவட்ட செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தலைமையில் நடக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தின் பல்வேறு கருப்பொருள்களில் கலந்தாலோசனை நடைபெற உள்ளது. வேர்களை தேடி பயணத்தை துரிதப்படுத்துதல், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலை திட்டம் மற்றும் நிதி அளிப்பு, மாவட்ட மகளிர் அணி மாநாடு நடத்துதல், கட்சியின் கூட்டமைப்பை வலுப்படுத்துதல், தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான வேலை திட்டம் ஆகியவற்றை மையக் கருப்பொருளாக கொண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

முன்னாள் மண்டல செயலாளர் ரா. கிட்டு, மண்டலசெயலாளர் ரா. ஸ்டாலின், விவசாய அணி மாநில செயலாளர் வீர. செங்கோலன், மண்டலதுனைசெயலாளர் சா. மன்னர் மன்னன், முன்னாள் மாவட்ட தமிழ்மாணிக்கம், மகளிர் விடுதலைஇயக்க மாவட்ட செயலாளர் ரேணுகா வேல்முருகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள். களச்செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து உதவவும் வேண்டுமென, மாவட்டச் செயலாளர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!