Perambalur: What happened to the petitions that Chief Minister Stalin received when he was in the opposition? Now, AIADMK General Secretary and former Chief Minister Edappadi Palaniswami is asking Ungaludan Stalin?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரை பயணம் அதிமுக சார்பில் நடத்தப்பட்டது. அப்போது குன்னத்தில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும், உதய நிதிஸ்டாலினும் 2026 தேர்தலில் -200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் குன்னம் தொகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தில் இப்பகுதி மக்களின் எழுச்சியை பார்க்கும் போது நீங்கள் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கனவு காணலாம், ஆனால் , நாங்கள் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.
அதிமுக 22 மாதங்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் நெருக்கடி கொடுத்ததால் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து மகளிர் உரிமைத் தொகையை கொடுத்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் கொடுத்ததாக பொய்பிரச்சாரம் செய்கிறார் ஸ்டாலின். தற்போது 30 லட்சம் பேருக்கு தருவதாக கூறுவது 2026 தேர்தல் ஓட்டுக்காக போடும் நாடகம் என்று குற்றம் சாட்டினார
100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஆட்சியில் மோசடி நடந்ததால் தான் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. ஆனால். நான் டெல்லியில் அமித்ஷாவிடம் போய் கோரிக்கை வைத்ததால் தான் 2999 கோடியை மத்திய அரசு விடுவித்தது என்றும் தெரிவித்தவர் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்ததாக தனக்கு டெல்லியில் விருது கிடைத்தது. ஆனால், இன்று பாலியல் வன்கொடுமை, கஞ்சா, கொலை என சட்டம் ஒழுங்கு கெட்டு கிடக்கிறது தமிழ்நாட்டில் திமுக.வின் 4 ஆண்டு ஆட்சியில் 7739 கொலை நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்..
தமிழ்நாட்டில் தற்போது உங்களுடன் ஸ்டாலின் என்று ஒரு திட்டத்தை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராய் இருந்த போது ஊர் ஊராய் சென்று வாங்கிய மனுக்கள் உங்களிடம் உள்ள போது அவற்றை நிறைவேற்றாமல் தற்போது 46 – கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மக்களிடம் கொடுத்து வீட்டுக்கு வீடு சென்று ஓட்டு கேட்கிறார்கள். ஆனால் இந்த திட்டமே முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது என்று தெரிவித்த அவர் அம்மா திட்ட முகாமிற்கான பெயரை மாற்றி இன்றுஉங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை ஸ்டாலின் அறிவித்திருப்பதாக அவர் விமர்சனம் செய்தார்.
மேலும் அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ள போது, ஏன் 4 மூத்த IAS அதிகாரிகளை கூடுதலாக நியமித்துள்ளனர். அப்படி நியமித்தால் அவர்கள் பார்த்துவரும் துறைய யார் பார்ப்பது என கேள்விஎழுப்பியதோடு, அமுதா ஐஏஎஸ் நேற்று பேட்டியில் பேசும் போது மக்களிடம் இதுவரை பெற்ற ஒரு கோடியே 5 லட்சம் கோரிக்கை மனுக்களில் ஒரு கோடியே ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக பொய்யாக புள்ளி விபரம் தருவதாக குற்றம் சாட்டினார். ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்து அதிமுக ஆட்சியில் அவர்கள் மீது சட்ட நவடிக்கை பாயும் என அரசு IAS அதிகாரிகளை எச்சரித்ததோடு, கட்சிப் பணி செய்யும் ஆர்வம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யலாம் என்றும் பேசினார்.
அதிமுக ஆட்சியில், குன்னம் தொகுதியில், கொட்டரை நீர்த்தேக்கம், வேப்பூர் கல்லூரி, வெள்ளாற்றில் தடப்பணைகள், மற்றும் குடிநீர் திட்டம், விவசாயத்திற்கான ஆக்கப்பணிகள் செய்தது குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த கூட்டம் திமுக வேட்பாளருக்கான வெற்றி கூட்டம் போல் உள்ளது. எனவே, 2026- தேர்தலின் போது குன்னம் தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் அதிமுக சின்னத்திலும், கூட்டணி கட்சி என்றால் கூட்டணி கட்சியின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் உள்பட அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள் பெரும் திராளாக கலந்து கொண்டனர்.