Perambalur: You can apply for a temporary firecracker shop license for Diwali; Collector informs!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகமாக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு, புலம் 9 ச.மீ முதல் 25 ச.மீ. வரை உள்ளடக்கியதாகவும், புலத்தினை குறிக்கும் புலவரைபடத்தில் சாலை வசதி, சுற்றுப்புறத் தன்மை மற்றும் கடையின் கொள்ளளவு ஆகியவற்றினை தெளிவாக குறிப்பிட்டு காட்டும் விதி – 83(3) புல வரைபடமும், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளர் மனுதாரராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்புநிதி ஆண்டில் வீட்டுவரி செலுத்திய ரசீது நகல், வாடகை கட்டிடம் எனில், உரிமையாளர் வீட்டுவரி செலுத்திய அசல் ரசீது நகலுடன், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20/-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் சம்மதக் கடிதம். உரிமத்திற்கான கட்டணம் ரூ.600/- அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் செலுத்து சீட்டு மற்றும் மனுதாரரின் மார்பளவு பாஸ்போர்ட் அளவுள்ள வண்ணபுகைப்படம், இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் கார்டு / குடும்ப அட்டை / வாக்காளர் அடையாள அட்டை) ஆகிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை 10.10.2025–க்குள் இ-சேவை மையங்கள் மூலமாக https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், அரசின் வழிமுறைகளை கடைபிடித்து விண்ணப்பம் செய்யுமாறும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் வெடிபொருள் விதிகள் 2008-இன் நிபந்தனைகளை கடைபிடிக்காத விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெகடர் ந.மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துளார்.