Perambalur: Youth commits suicide in forest due to failed love?! Police investigating!!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்குவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாடாலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து போன வாலிபர் சேலம் மாவட்டம், மேட்டூர் டேம் அருகே உள்ள ஆண்டிக்கரையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் உத்திரகுமார் (28) என்பது தெரியவந்தது. பின்னர், உத்திரகுமாரின் உறவினர்ளை தொடர்பு கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில், உத்திரகுமார் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு வேலைக்கு செல்வதாக சென்றதாக தெரிவித்தனர். உத்திரகுமார் தற்கொலைக்கு காதல் தோல்வியாக கூட என்ற கோணத்திலும் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும், ராமேஸ்வரம் சென்றவர் எதற்கா பாடாலூர் பகுதிக்கு வரவேண்டும் என்ற கோணத்திலும், அல்லது யாராவது அழைத்து வந்து கொலை தூக்கிலிட்டு சென்றுவிட்டார்களா? என்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.