Students suffer who go to the Higher study for not available revenue certificates

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில் வருவாய்த்துறை சார்பில் வழங்கக்கூடிய சான்றுகள் வழங்கப்படாததால் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

பிளஸ் 2 பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பம் செய்யும் முக்கியமான நேரம்
இது. மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வருவாய்த்துறை சார்பில் வழங்கக்கூடிய ஜாதி சான்று, இருப்பிடச்சான்று, வருமானச்சான்று மற்றும் முதல் பட்டதாரி சான்று உள்ளிட்டவைகள் அவசியத்தேவையாகும்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம், புதுவாழ்வு திட்ட அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் தனியார் இடங்களில் இயங்கி வரும் இ.சேவை மையங்களில் வருவாய்த்துறை சார்பில் வழங்கக்கூடிய சான்றுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதாவது டி.என்.ஈ டிஸ்டிக் சேவை தளத்தின் மூலம் சான்று கேட்டு ஏராளமான மாணவ, மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 20 நாட்களாக விண்ணப்பித்த பலருக்கு சான்றுகள் கிடைக்கப்படவில்லை.
இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் சான்றுகளுக்காக தாலுகா அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் என மாறி மாறி அலைகின்றனர்.

மருத்துவம், பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும் 3 ந் தேதி கடைசி என்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் வருவாய்துறை சான்று கிடைக்காமல் வேதனையில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சான்றிதழ்களை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!