Tamil Nadu Transport and Electricity Minister Sivashankar inaugurated the Perambalur-Chennai AC bus!
பெரம்பலூரில் இருந்து சென்னைக்கு ஏ.சி. பஸ் சேவையை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் புதிய பஸ் நிலையத்திலிருந்து கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிராபகரன் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்த பஸ் தினந்தோறும் மாதவரம் பஸ் நிலையத்திலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு கிளாம்பாக்கம், மேல்மருவத்தூர், திண்டிவனம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டை வழியாக மாலை 7.15 மணிக்கு
பெரம்பலூர் பஸ் நிலையம் வந்தடையும், மீண்டும், பெரம்பலூர் பஸ் நிலையத்திலிருந்து மீண்டும்,
இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.00 மணிக்கு மாதவரம் சென்றடையும்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர் பெரம்பலூர் எம்.ராஜ்குமார், வேப்பூர் கிழக்கு அழகு.நீலமேகம், வேப்பூர் தெற்கு ராஜேந்திரன், வேப்பூர் முன்னளர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, முன்னாள் எம்.எல்.ஏ வரகூர் பா.துரைசாமிதிருச்சி விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர் டி.ஆர். சிவசங்கர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குநர்கள் கும்பகோணம் தசரதன், விழுப்புரம் குணசேகரன், மண்டல பொதுமேலாளர்கள் திருச்சி சதீஷ்குமார், விழுப்புரம் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, இன்று காலை குன்னம் போக்குவரத்து பணிமனையில் இருந்து ஆதனூர் வழியாக திருச்சி செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்தை ஆதனூரில் கலெக்டர் ந.மிருணாளினி, தலைமையில் தொடங்கி வைத்தார். இப்பேருந்து தினந்தோறும் காலை 6.45 மணிக்கு குன்னம் போக்குவரத்து பணிமனையில் இருந்து குன்னம், பெரியம்மாபாளையம், ஆதனூர், கூடலூர், கொளக்காத்தம் வழியாக திருச்சி வரை இயக்கப்படும். இப்பேருந்து சேவை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும், பிற பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஆலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்னர்.