With the Tamil Nadu government’s Pongal gift of Rs. 3,000, shops are witnessing huge crowds! Merchants are delighted; it’s turning out to be even better than Diwali!

தமிழ்நாடு முதலமைச்சர் வரும் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3 ஆயிரத்தை அறிவித்து, அதனுடன் வழக்கமாக வழங்கும் சர்க்கரை, கரும்பு, பச்சரிசி வழங்க உத்தரவிட்டார். அதனடைப்படையில் பொங்கல் பரிசுத் தொகையை பெற்ற ஏழை எளிய மக்கள் அகம் மகிழ்ந்தனர். 2 சதவீத அரசு ஊழியர்கள் எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாமல் திமுக ஆட்சியில் போராட்டம் செய்கின்றனர். அதற்கு பின்னனியில் பல சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இயக்குகின்றன. தீபாவளிக்கு போனஸ் பெறும், அரசு ஊழியர்களுக்கு அரசு பொங்கல் போனஸ் வழங்குகிறது. அதனுடன் ரேசன் கார்டிற்கும் பலர் இது கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் போலவே, பொங்கல் போனசாக ரூ. 3 ஆயிரம் பெறுகின்றனர். இதை அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது பொங்கல் போனஸ் ரூ. 3 ஆயிரம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் என 4 ஆயிரம் கிடைத்துள்ளதால் இந்த பொங்கல் கொண்டுவதில் பொதுமக்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், கூடுதலாக பணம் செலவு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், கடைவீதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, நாவல் மரத் தெரு, செல்வவிநாயகர் கோவில் தெரு, புதிய பேருந்து நிலையம், மதனகோபலபுரம், வெங்கடேசபுரம் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக துணிமணிகள், மளிகை சாமான்கள் வாங்கி செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம், அகரம்சீகூர், லப்பைக்குடிக்காடு, அரும்பாவூர், கிருஷ்ணாபுரம், திருச்சி மாவட்டம் துறையூர், அரியலூர், சேலம் மாவட்டம் ஆத்தூர், வீரகனூர் ஆகிய பகுதிகளில் பெரம்பலூர் மாவட்ட மக்கள் பொருட்களை வாங்குவதால் அப்பகுதி வணிகர்கள் மிக்க மகிழச்சி அடைந்துள்ளனர். மேலும், பெண்களுக்கு விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு போன்றவற்றால் ஏழை எளிய பெண்கள் மகிழச்சி அடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks