8-7- mass coll

குன்னம் வட்டம் காடூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மீனாட்சி தலைமையில் இன்று மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பேசியதாவது:

குன்னம் வட்டம் காடூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்காண்டுகளில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வினியோகம், சிமெண்ட் கான்கரீட் சாலைகள் அமைத்தல், தார்சாலைகள் அமைத்தல், சுடுகாடு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரக உட்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கட்டிட பராமரிப்பு திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்தல், நுலக கட்டிடம் பழுது நீக்குதல், சின்டெக்ஸ் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.6.54 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காடூர் ஊராட்சியில் 23 பசுமை வீடுகள் ரூ.48.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மைய கட்டிடம் மற்றும் ராஜீவ்காந்தி சேவை மைய கட்டிடம் ரூ.19.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர்குழாய் அமைக்கும் பணிகள், கழிவு நீர் வாய்கால்கள் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தம் ரூ.1கோடியே 94 ஆயிரம் மதிப்பீட்டிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள்; கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச்சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும்.

இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாள்களுக்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) தெரிவித்தார்.

இந்த முகாமில் 75 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் 151 மதிப்பில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, பட்டா மாற்ற ஆணைகள், பட்டா நகல்கள், புதிய குடும்ப அட்டைகள், வேளாண்மைத்துறையின் மூலம் விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) வழங்கினார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை வழங்க தமிழக அரசினால் வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சை வாகனத்தின் மூலம் இன்றைய மனுநீதிநாள் முகாமில் மாற்றுத்திறனுடைய குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) பார்வையிட்டார்.

வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைச்சாந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!