Rescue of trees belonging to the temple near Perambalur!

பெரம்பலூர் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்திலிருந்த 5 டன் மரத்தினை தாசில்தார் பிரகாசம் மீட்டார்.

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராம சர்வே எண்111/17 இல்.0.90 செண்டு நிலம் வேலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இந்த நிலத்தில் வளர்ந்திருந்த வதனாரை மரங்களை வேலூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் அசோக் (40) என்பவர் வெட்டி தனி நபருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.

இது பற்றி தகவலறிந்த அக்கிராம பொதுமக்கள் இந்து சமய அறநிலையத்துறை கொடுத்த தகவலின்பேரில் தனி தாசில்தார் பிரகாசம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு மரங்களை கைப்பற்றினார். சட்ட விரோதமாக கோயில் நிலங்களிலிருந்த மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட முயன்ற அசோக் மீது மேல் நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அரவிந்தனுக்கு பரிந்துரை செய்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!