Students must use the right hand for development and the left arm of social development: Vice Chancellor Selladurai

வலதுகரம் உங்கள் வளர்ச்சிக்கும், இடதுகரம் சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, உலக வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் என மாணவர்கள் சூளுரை ஏற்க முன்வர வேண்டும் என மதுரை காமராசர் பல்கலை கழகம் துணை வேந்தர் செல்லத்துரை பேசினார்.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள்
வழங்கிய மதுரை காமராசர் பல்கைல கழகம் துணை வேந்தர் செல்லத்துரை பேசியதாவது:

மாணவர்கள் இறகை விரித்து உயர உயர பறக்க வேண்டும். வானில் பருந்தை நெருங்கும் வரையில் பறக்க வேண்டும். உயர உயர பறந்தாலும் துல்லியமான
பார்வை இருக்க வேண்டும்.

ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலிருந்து வந்தாலும் ராமநாதபுரத்தை மட்டுமின்றி உலகையே பார்க்க வேண்டும்.மனதை விரித்துவிட வேண்டும். சுருக்கிவிடக்குடாது.

ஒவ்வொரு மாணவர்களும் நேர்மறை சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்படும் சவால்களை சாதனைகளாக மாற்றும் வகையில் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள்மாபெரும் சக்தி. அதனால்தான் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2020ல் நம் நாடு வல்லரசு நாடாக மாறும் என உங்களை நம்பி தெரிவித்துள்ளார்.

இங்கு அனைத்து வளமும் உள்ளது. மாணவர்கள் தங்களது வலதுகரத்தை தங்களின் வளர்ச்சிக்காகவும், இடது கரத்தை சமுதாய வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி, உலக
வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி கொள்ள சுளுரை ஏற்க வேண்டும்.

மாணவர்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம் தேவை. வெளிநாட்டில் இருக்கும்போது சுயகட்டுப்பாடு தானாக வருகிறது. ஆனால் அதே நம்நாட்டில் இருக்கும்போது சுயக்கட்டுப்பாடை இழக்கிறோம். சமுக பார்வை இருக்க வேண்டும்.

விஞ்ஞானம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கு மாணவர்கள் மனதை கூர்மைப்படுத்த வேண்டும்.

கரங்களை வளப்படுத்த வேண்டும். இதயம் மென்மையாக இருக்க வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும், சுயகட்டுப்பாடு அவசியம் தேவை. மாணவர்களாகிய நீங்கள் இங்கு பட்டைதீட்டி வைரங்களாக ஜொலிக்கின்றீர்கள்.

நாட்டில் போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை குறைந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு சீராகிவிட்டது, மக்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று அர்த்தம். அத்தகைய சுழல் ஏற்பட கல்வி… கல்வி… கல்வி…மட்டும்தான்.

மாணவர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். நீங்கள் ஒவ்வொரு நாளும் துாங்கும் முன் உங்கள் மனதுக்கு நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என கட்டளையிடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் கட்டளையை உங்கள் மனது ஏற்று நீங்கள் ஐஏஎஸ் அதிகாரியாக வரமுடியும். மனதை துாய்மையாக்கி நல்ல சிந்தனையை வளர்த்து உங்கள் மனதிற்கு கட்டளையிடுங்கள். இவ்வாறு பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் கல்லுாரி முதல்வர் அமானுல்லா வரவேற்றார். விழாவில் 436 இளங்கலை பட்டதாரிகளுக்கும், 32 முதுகலை பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

13 மாணவ மாணவிகள் பல்கலை அளவில் ரேங்க் பெற்று சாதனைபடைத்தனர். அவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்று வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, மதுரை காமராசர் பல்கலை கழக முன்னாள் துணை வேந்தர் சாலிகு, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் ராஜாத்தி அப்துல்லா, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், பெற்றேர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!