தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான பொறுக்குத் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வரும் டிச.6 ம் தேதி நடைபெறுகிறது
இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபில் தெரிவித்துள்ளதாவது:
மாவட்ட அளவிலான ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின்கீழ் தேசிய மகளிர் விளையாட்டுப் போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான பொறுக்குத்தேர்வு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் தனிநபராக மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். குழுவாக கலந்து கொள்ள இயலாது.
கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், கைப்பந்து, ஹாக்கி, லான் டென்னிஸ், தடகளம் இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கபாடி, கோ-கோ, வாலிபால் ஆகிய விளையாட்டுக்கள் வரும் டிச. 6 அன்று காலை 9.00 மணிக்கு பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள 25 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீராங்கணைகள், தங்களின் விளையாட்டுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் பொறுக்குத் தேர்வு நடைபெறும் 06.12.2015 அன்று காலை 9.00 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்து பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.