Residential center on behalf of the SSA , accepted the call to lead
school kalaimalar.com
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) க.முனுசாமி விடுத்துள்ள தகவல்அ :

அனைவருக்கும் கல்வி இயக்கம் அரியலூர் மாவட்டம் அரியலூர் ஒன்றியம் கரு சேனாபதியில் செயல்பட்டு வரும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட மையத்தினை ஏற்று நடத்துவதற்காக தகுதிவாய்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன.

தங்களது அரசு சாரா தொண்டு நிறுவணம் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு அல்லது அறக்கட்டளை சட்டத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். வருமான வரி கணக்கு எண், 80ஜி மற்றும் 12ஏ பெற்றிருக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி தாக்கல் செய்தமைக்கான விவரம் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். கடந்த காலங்களில தங்களது நிறுவனம் வாயிலாக ஏற்று நடத்திய செயல்பாடுகளுக்கு தணிக்கைத் தடைகள் ஏதுமின்றி முடித்திருக்க வேண்டும்.

குழந்தைகள், பெண் குழந்தைகள் பராமாpப்பு சார்ந்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் உண்டு உறைவிட மையம் நடத்திய முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி இருப்பது சிறப்பு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27.01.2017 அன்று மாலை 5.30 மணிக்குள் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், அனைவருக்கும் கல்வி இயக்கம், பெரம்பலூர் அலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!