hqdefault (1)பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெரம்பலூர் மாவட்டதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் மற்றும் ஆலத்தூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 09.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை செயல்படும். பொதுமக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளைப் பெறலாம்.

அரசு இ-சேவை மையங்களில் தற்போது, கூடுதலாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது மின் கட்டணத்தை ரொக்கமாக அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தி இரசீது பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மின்கட்டணம் செலுத்தும் வசதி பிரதி தினம் காலை 09.45 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

மின் கட்டணத் தொகை ரூ.1-லிருந்து ரூ.1,000 -க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.10 – ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.1,001-லிருந்து ரூ.3,000-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.20-ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.3,001-லிருந்து ரூ.5,000 -க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.30 – ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.5001-லிருந்து ரூ.10,000 -க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.40 – ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.10,000- க்கு மேல் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.50 -ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் மின் கட்டணத் தொகையுடன் வரையறுக்கப்பட்டுள்ள சேவைக்கட்டணத்தைத் தவிர கூடுதலாக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. எனவே, பொதுமக்கள் இந்த இ-சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!