Farm Workers Union resolution Cory on debt waiver

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்: பெரம்பலூரில் அகில இந்திய விவாசய தொழிலாளர் சங்கத்தின் பயிற்சி முகாம் மாவட்டத் தலைவர் வி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், முன்னிலை வகித்தார். மத்திய கமிட்டி உறுப்பினர் எஸ்.சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

இப்பயிற்சி முகாமில் , வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், வேலை இழந்த தொழிலாளாகளுக்கு வறட்சி நிவாரணம் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டியும்,

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு விரிவுபடுத்துவதுடன், 100 நாள் வேலை வழங்கி வருவதை, 200 நாட்கள் பணிநாட்களாக உயர்த்தி கூலியை ரூ.400 ஆன வழங்க வேண்டும், ரேசன் கடைகளில் மாதம் 30 கிலோ அரிசி வழங்க வேண்டும்,

பருப்பு உளுந்து, சமையல் எண்ணெய் கோன்ற அத்தியாவசிய பண்டங்களை மாதந்தோறும் அனைவருக்கும் வழங்க வேண்டும், முதியோர், விதவை, மாற்றுத் திறனாளி, திருமண உதவித் தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும், அனைத்து கிராமங்களிலும்,

பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி பல மாதங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை, உடனே வழங்க வேண்டும்,

வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து வங்கிகளிலும், விவசாயக் கடன், கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேப்பூர் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் லோகநாதன், வேப்பூர் தலைவர் கோவிந்தராஜ், வேப்பந்தட்டை தலைவர் பாரதி, மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தீர்மானமாக இயற்றப்பட்ட கோரிக்கைகளை கையெழுத்து இயக்காமாக நடத்துவதுடன் வரும் ஏப்ரல் 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!