பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தல் பள்ளிகளில் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் (பொ) மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறித்துவர் / இஸ்லாமியர் /புத்த மதத்தினர் /சீக்கியர் மற்றும் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ/ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-2016-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ/மாணவியரின் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மாணவ/மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (ஒன்றாம் வகுப்பு நீங்கலாக) 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை/ஆதிதிராவிடர் நலத்துறை/ மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள் மூலம் 2015-2016-ஆம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது. 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவ/மாணவிகள் புதியது(ம) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை www.bcmbcmw.tn.gov.in
என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை படியிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் வரும் 15ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தவிர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டிய ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோடு செய்திட வேண்டும்.

விண்ணப்பித்த பின் விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து கல்வி நிலையத்தில் வரும் 31.07.2015-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிலையங்கள் மாணவ/மாணவியர்களிடமிருந்து பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விவரங்களை அதற்கான கேட்புப் பட்டியலில் பதிந்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வரும் 25ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் வரும் 31ம்தேதிக்குள் பார்வேர்டு செய்ய வேண்டும். சிறுபான்மையின மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!