Chitrai Pournami Festival: The Chitrai Pournami Festival at Siruvachur Madurakali Amman Temple started with Srichandi Manjari Maha Homam!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளிஅம்மன் கோவிலில் மகா கும்பாபிசேகம் ஏப்.5-ந்தேதி விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து மண்டல பூஜைகள் தினந்தோறும் நடந்துவருகின்றன. இதனிடையே சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 13-வது சித்திரை பவுர்ணமி விழா நேற்று தொடங்கியது.

இதனை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமம் நடந்தது.

விழாவிற்கு ஸ்ரீமதுராம்பிகாநந்த பரமேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தலைமை வகித்து சண்டி மஞ்சரி ஹோமத்தை தொடங்கிவைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.இதில் யாகசாலை முன்பு கும்பகலசங்கள் வைக்கப்பட்டு, ஸ்ரீமகா மேரு மண்டலியின் நிர்வாக பொறுப்பாளர் சுப்ரமணியன் முன்னிலையில் கும்பபூஜைகள் நடந்தன. இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மீக மெய்யன்பர்கள் பக்தர்கள் குழுவினர் கலந்துகொண்டு கும்பபூஜைகளையும், சிவாச்சாரியார்கள் ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்திவைத்தனர்.

இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை குருவுக்கு பாதபூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 8மணிக்கு தொடங்கி காலை 11மணிவரை ஸ்ரீநவாவரணபூஜையும், நவாவரண ஹோமமும், மதியம் 1மணிவரை அகண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணமும், குங்குமஅர்ச்சனையும் நடக்கிறது.இதில் பல நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்டு தற்போது லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!