பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் சர்க்கரை ஆலை எறையூர் அருகே உள்ள சின்னாறில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மேற்கு பகுதியில் பொதுப்பணித்துறையினரால் அமைக்கப்பட்டுள்ளது சின்னாறு நீர்தேக்கம். 72 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்ககூடிய இந்த நீர்தேக்கமானது சுமார் 3 கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாகும்.

தண்ணீர் வெளியேறும் மதகு பகுதி 13 அடி உயரம் கொண்டது. பெருந்தலைவர் கமராஜர் ஆட்சி காலத்தில், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்ரான கக்கனால் இந்த நீர்த்தேக்கம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நீர்தேக்கத்தால் எறையூர், பெருமத்தூர், பெண்ணகோணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கோனேரி ஆறு, வேதநதி ஆறு ஆகியவற்றில் வரக்கூடிய தண்ணீரானது இந்த நீர் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு, பின்னர், பாசனத்திற்கு திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எசனை, லாடபுரம், அனுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சின்னாறு நீர்தேக்கம் தனது முழு கொள்ளவை எட்டும் வகையில் வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது மொத்த கொள்ளவான 13 அடி உயரத்தில் 11 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி வருகிறது இதனால் அந்த பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!