இது குறித்து மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:

கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால்நோய், வாய்நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோயாகும். இந்நோய் 63 வகையான வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிகவிரைவில் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும் கால் குழம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ளமுடியாமல் மிகவும் பாதிக்கப்படும். மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், மேல்தோல் முடிகள் அதிகம் வளர்ந்தும் காணப்படும். பால் கறவை குறையும். கறவைப்பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும்.

எனவே இந்நோய் தாக்காவண்ணம் இருப்பதற்கு மாடுகளுக்கு வருடத்திற்கு இரு முறை தடுப்பூசிப் பணிமேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். பெரம்பலூர்; மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையினரால் கால் வாய்நோய்த்தடுப்புத் திட்டம் 9-வது சுற்றின் கீழ் 2015ம் வருடம் செப்;டம்பர; மாதம் 1-ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை கால் வாய்நோய் தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே கிராம பொதுமக்கள் தங்களின் கால்நடைகளை கடுமையாக பாதிக்கும் கால் மற்றும் வாய் நோய்களிலிருந்து, கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் இந்த முகாமில் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசிகளை போட்டுக்ககொள்வதன் மூலம், தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் பெருமளவு குறைப்பதுடன், கால்நடைகளை இறப்பிலிருந்தும் காப்பாற்ற முடியும்.

இந்த கால்நடை முகாமில் 4 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, மற்றும் கறவை பசு உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற வேண்டும். மேலும் தகவல்களுக்கு மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்புத்துறை) அப்சல் 9443397019 என்ற எண்ணிலும், உதவி இயக்குனர் மனோகரன் 9442161511 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!