cpi_perambalur.kalaimalar.com
பெரம்பலூர்: பெரம்பலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்ட அலுவலக கட்டடம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் வெள்ள நிவாரணபணி திருப்திகரமாக இல்லை. மழையால் பெரிய பாதிப்புஏற்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பை தடுத்த நிறுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இயற்கை பேரிடரை சமாளிக்க எல்லாரும் சேர்ந்து பணியாற்றவேண்டும்.

தமிழகத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ளது. அடுத்த மாநிலமான ஆந்திரா,கேரளாவில் நீர் பெறுகிறோம். நீர்ஆதராரங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் அழித்து வீட்டு மனைகளாக ஆக்கிவிட்டனர். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து நீர்வளஆதராமான ஆறுகளில் உள்ள மணல் கொள்ளையடித்து விட்டனர். ஏரி,குளங்கள், ஆறுகளில்உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துõர்வாரி நீர்வள ஆதாராங்களை பாதுக்காக்க வேண்டும்.

கனமழையால் 100க்குமேற்பட்ட உயிர்சேதம், ஆயிரத்திற்கு மேலான கால்நடைகள், லட்சக்கணக்கான ஏக்கர் விளைபயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட உயிர்சேதத்திற்கு நிவாரணநிதியாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளில் பகுதி,முழுவதும் என பாகுபாடு பார்க்காமல் பாதிப்புக்குள்ளான அனைத்து வீடுகளுக்கும் ஒரேஅளவாக நிவாரணம் வழங்கவேண்டும்.

பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணநிதி வழங்கவேண்டும், இயற்கை சீற்றாத்தால் தனி நபரின் பயிர் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் பெறும் வகையில் மத்திய அரசின் பயிர்காப்பீடு திட்டத்தை பரிசீலனைசெய்து அதன் விதிமுறைகளை மாற்றியமைக்கவேண்டும்.

தமிழகஅரசு வெள்ளப்பாதிப்புக்கு நிவாரண தொகையாக முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம்கோடி நிவாரண நிதி வேண்டும்என மத்தியஅரசிடம் கோரியுள்ளது. இந்த நிவாரணதொகையினை உடனடியாக மத்திய அரசு வழங்கவேண்டும். மேலும் தமிழகஅரசு வெள்ளப்பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுத்து கூடுதல் நிவாரணதொகையினை மத்தியஅரசிடம் கேட்டுபெற்று, அதனுடன் தமிழகஅரசின் நிதியை சேர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகமாக நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைசிறுத்தை ஆகிய 4 கட்சிகளை சேர்ந்து மக்கள் நல கூட்டியக்கம் துவங்கப்பட்டுள்ளது. தேர்தலில் லட்சியம், மக்கள்நலன், கொள்கைக்காக இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இது தற்போது சட்டசபை தேர்தல் கூட்டணியாக மாறியுள்ளது.

திருச்சியில் வரும் 25ம்தேதி கூட்டியக்கத்தின் மாவட்டசெயலாளர்கள் ஆலோசனைகூட்டமும், மதுரையில் வரும்12ம்தேதி மக்கள்நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டவிளக்க பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. தமிழ்மாநிலகாங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகளை எங்களது கூட்டணிக்கு வரவேற்று கடந்த நவம்பர் 2ம்தேதி அழைப்பு விடுத்தோம். அதற்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர்.

இதனால் விரைவில் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் எங்களது கூட்டணியில் இணைவதன் மூலம் எங்களது கூட்டணி வலுப்பெறும் என்றார்.பேட்டியின்போது, தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன்,முன்னாள் எம்எல்ஏ சிவபுண்ணியம், மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!