பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் க.வைத்திலிங்கம் ஆலத்தூர் ஒன்றியத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கூடலூர், கூத்தூர், கொளத்தூர், அருணகிரி மங்கலம், மேத்தால் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். அப்போது அதிக அளவில் ஆதரித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமன வாக்காளர்களிடம் கோரினார்
பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை விளக்கி பேசிய அவர், குன்னம் தொகுதி கல்வி, வேலைவாயப்பு, தொழில் துறை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னதாக தெரிவித்தார்.
அப்போது பெரம்பலூர் பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அழகு.நீலமேகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கிளை பொருப்பாளர்கள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.