பெரம்பலுார் : தொடர் மழையால் பெரம்பலுார் மாவட்டத்தில் சேதமடைந்த பருத்தி பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அரசுக்கு பரித்துரைக்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில், குன்னம் எம்.எல்.ஏ., சிவசங்கர் உள்பட தி.மு.க.வினர் பெரம்பலுார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமதுவிடம் இன்று மனு கொடுத்தனர்.

20151214020732அதில் தெரிவித்து்ள்ளதாவது: அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக பெரம்பலுார் மாவட்த்தில் பருத்தி விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மக்காச் சோளம் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி இன்னும் வடியாமல் உள்ளது.

இதனால் வேர் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. பருத்தி காய்கள் அழுகி கெட்டு போகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் செடிகளிலேயே காய்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. வயல் ஈரமாக இருக்கும் சூழலில் எஞ்சி இருக்கும் பருத்தி காய்களையும் அறுவடை செய்ய இயலாது.

மூன்று மாத காலமாக விவசாயிகளின் உழைப்பு வீண் போகிவிட்டது. கிடட்த்தட்ட இதுவரை விவசாயிகள் ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து இருக்கிறார்கள்.

எனவே இந்த முதலீட்டையும், மனித உழைப்பையும் கணக்கில் கொண்டு ஏக்கருக்கு ஐம்பதாயிரம் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்து உதவிட விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

அப்போது திமுக கட்சி பிரமுகர்கள் மாவட்ட துணைச் செயலாளர் ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!