பெரம்பலூர்: தனியார்துறை பாதுகாப்பு சேவைப்பணிகளில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் இலவச திறன் எய்தும் பயிற்சித்திட்டத்தில் பயன்பெற இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – அரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் மஞ்சுளாதேவிஉ
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி காரணமாக பெரு மற்றும் குறு நகரங்களின் வளா;ச்சியானது பெரிதும் வியக்கத்தக்க அளவில் விரிவடைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக உயர்ந்து வரும் அடுக்குமாடி கட்டிடங்கள், பிரம்மாண்ட வணிக வளாகங்கள், தனிக்குடியிருப்புகள்; தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் என பல்வகையில் நகரங்கள் விரிவடைந்து கொண்டே வருகிறது. ஆனால் இவ்வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்போது பயிற்சி பெற்றவர்கள் மிக குறைவான அளவில் உள்ளனர்.
எனவே இதனை கருத்தில்கொண்டு தமிழகஅரசு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக இளைஞர்கள் தனியார்துறையில் வேலைவாய்ப்பினை பெறும் வகையில் பாதுகாப்பு சேவைப் பணிகள் குறித்து 21 நாள் திறன் எய்தும் பயிற்சியினை தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து இலவசமாக வழங்க உள்ளது. பயிற்சி நேரம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் திருப்திகரமாக பயிற்சியினை நிறைவு செய்யும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு தினமும் தேனீர் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருத்தல் வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பயிற்சி விண்ணப்பங்களை பெரம்பலூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இப்பயிற்சிக்கு மாவட்டத்திற்கு 250 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் கல்விச்சான்று சாதிச்சான்று இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டையின் அசல் மற்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்கள் கொண்டு வர வேண்டும். மேலும் இப்பயிற்சியில் சேர இச்சான்றுகளின் 2 நகல்களுடன் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி செய்து அளிக்கவேண்டும்.
இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 12.10.2015 முதல் 16.10.2015 வரை உள்ள நாட்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூரில் வழங்கப்படும். இத்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பிரிவு ஒன்றிற்கு 50 நபர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும். அப்பயிற்சியின் முடிவில் தனியார்துறை பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு ஏதுவாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மேற்கூறிய தினங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் முதல்வரை அணுகி பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 04328-290590 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.











kaalaimalar2@gmail.com |
9003770497