பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில், குரூப் 1, 2 மற்றும் 4 பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இதுவரை 200 க்கும் மேற்பட்டவர்கள் அரசுப் பணிக்கு தேர்வாகி பணியில் உள்ளனர். இது தவிர தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் பணிக்கான இலவச பயிற்சி வகுப்பும் நடத்தப்பட்டது.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குரூப்-,2 பணிக்கான பொதுத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் 50 நபர்கள் மட்டும் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

தகுதித் தேர்வு 31.10.2015 சனி கிழமை நடத்தப்படும். தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு இரு புகைப்படங்களுடன் 30.10.2015 அன்று மாலை 5.00 மணி வரை அளிக்கலாம் (ஞாயிறு தவிர). தேர்வுக்கான நுழைவுச்சீட்டு உடனடியாக வழங்கப்படும். நுழைவுச்சீட்டில் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வு நாளன்று நேரடியாக தேர்வு மையத்திற்கு வரவேண்டும்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் / வட்டார வளர்ச்சி அலுவலரை 90037-52224 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!