பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

2014-2015-ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் SDAT ஊக்க உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான ஊக்க உதவித்தொகையாக உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000ம் கல்லூரி, பல்கலைக் கழக விளையாட்டு வீரர்களுக்கு ரூ.13,000ம் வழங்கப்படவ உள்ளது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கு 01.07.2013 முதல் 30.06.2014 முடியவுள்ள காலக் கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப்பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இதற்குரிய விண்ணப்பத்தினை அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரின் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத் தொகையினை செலுத்தி பெற்று கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.10. ஆகும்.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தினை, விண்ணப்ப விலையான ரூ.10யை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெயரில் அஞ்சல் ஆணையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக 31.08.2015 -ந் தேதிக்கு முன்னர் விண்ணப்பதாரரின் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!