AMMA’s pharmacy without medicine! 8 Horlicks bottles in Perambalur

பெரம்பலூரில் கடந்த பிப்.24ம் தேதி அன்று, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சங்குப்பேட்டை அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மருந்தகம் தொடங்கப்பட்டது. அப்போது, 20 சதவீதம், 15 சதவீதம் சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பபட்டது. இதணை அறிந்த நோயாளிகள் மருந்துகளை வாங்க வந்து பார்த்த போது அது விளம்பரம் மட்டும்தான் என்பதை அறிந்து ஏமாந்து சென்றனர். இதை அறியாத பலர் தினமும் அம்மா மருந்தகத்திற்கு சென்று மருந்துகளை தள்ளுபடியில் வாங்க ஆர்வத்துடன் சென்ற அவர்களுக்கு அங்கு 8 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் மட்டும் இருப்பதோடு, பெட்டிகடையில் விற்கப்படும் அனால்ஜின், நோவால்ஜின், ஆக்சன் 500 போன்ற சாதரண தலைவலி மாத்திரை 2 ரூபாய் தைலம் கூட இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் வழக்கமான மருந்து கடைகளையே தேடி பொதுமக்கள் சென்று கூடுதல் விலைக்கு வாங்கி செல்கின்றனர். தொடங்கப்பட்டு 15 நாட்களுக்கு மேல் ஆகியும், மருந்து விற்பனை செய்வதற்கு எந்த உரிமம் பெறவில்லை என்பதோடு, டி.பார்ம் படித்தவர்களும் மருந்து வினியோகிக்க கிடைக்கவில்லை. வெறும் கடையை 15 நாட்களுக்கு மேலாக திறந்து வைத்து காத்து வாங்கி கொண்டு உள்ளனர். ஆனால், சிவன் கோவில் அருகே உள்ள மருந்துகடையில் தொடர்ந்து மருந்து விற்பனைக்கு ஆட்கள் கிடைக்காமலும், போதிய மருந்துகள் இல்லாத நிலையில் கூட்டுறவு சங்கம் மேலும், ஒரு கடையை திறந்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது. பெரம்பலூரை மற்ற மாவட்டங்களில் இயங்கும், கூட்டுறவு மற்றும் அம்மா மருந்தங்கள் சிறப்பாக இயங்கி வருவதோடு லாபத்துடன் செயல்படுகின்றன. மேலும், தனியார் மருந்தகளுக்கு இணையாக அனைத்து விதமான மருந்துகளையும் குறிப்பிட்ட சதவீத தள்ளுபடியில் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!