பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அக்.3, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர் மற்றும் மகளிருக்கு இம்முகாம் பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும்.

சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெருநகரங்களில் உள்ள அப்பல்லோ பார்மஸி, எம்.ஆர்.எப். லிமிடெட், சென்னை ஒமேகா, ஏ.பி.டி மாருதி, டிவிஎஸ் லாஜிஸ்டிக், எல் ரூ டி லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

காலை 10 மணி முதல் வருபவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்படும், 11 மணி முதல் 3 மணிவரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேர்காணல் நடைபெறும். மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்களின் வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி, பட்டயப் படிப்பு, டிப்ளமோ இன் பார்மஸி, பொறியியல், இளங்கலை மற்றும் முதுகலை போன்ற கல்வித் தகுதிகளை கொண்டவராக இருத்தல்வேண்டும்.

இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது அனைத்து கல்விச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், குடும்ப அட்டையின் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்-2 உடன் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகுதியுடையோர் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு மகளிர் திட்ட அலுவலத்திற்கு 04328 -225362 என்ற எண்ணிலோ, உதவித் திட்ட அலுவலர் (பயிற்சி) 9445034170 என்ற எண்ணிலோ, புதுவாழ்வுத் திட்ட அலுவலகத்திற்கு 04328 – 225133 என்ற எண்ணிலோ, உதவித் திட்ட மேலாளர் 9488044623 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!