பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தில் மின்விபத்துக்கள் கடந்த 3 மாதங்களில் மின்துறையை சாராத நபர்களுக்கு மின்விபத்துக்கள் கீழ்கண்டவாறு ஏற்பட்டுள்ளது.

மின்சாதனங்களை பயன்படுத்தும்போதும் மின்பாதைகளில் பணிசெய்யும்போதும் உரியபாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்தால் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தவிர்க்கலாம்.

2015-ம் ஆண்டு ஏப்ரல் 2015-முதல் ஜுன்- 2015 வரை கடந்த 3 மாதங்களில் பெரம்பலூர் மின்பகிர்மான வட்டத்தில் 11 பேர் உரிய பாதுகாப்யின்றி மின்சாதனங்களை இயக்கியபோதும் மின்பாதைகளில் பணியாற்றியபோதும் இறந்துள்ளனர்.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க மின்நுகர்வோர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்

வீடு மற்றும் தொழிற்சாலைகளில் தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்,

பயிற்ச்சியுடன் அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தக்காரர் மூலமே பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

எர்த்கம்பிகள் முறைப்படி அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து மின்இணைப்புகளிலும் எல்சிபி (எலெக்ட்ரானிக் சர்க்யூட் பிரேக்கர்) எனப்படும் டிரிப்பர்கள் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளில் மின்சாதனங்கள். சுவிட்ச்போர்டுகளில் பழுதுகள் ஏற்படும்போது தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டே சரிசெய்ய வேண்டும்.

மின்பாதை அருகே மரக்கிளைகள் செல்வதை தவிர்க்கவேண்டும் அவ்வாறு செல்லும் மரக்கிளைகளை வாரியபணியாளர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தவேண்டும்.

மின்பாதை அருகில் உயரமான கம்பிகள் பைப்களை பாதுகாப்பற்ற முறையில் எடுத்து செல்லக்கூடாது.

மின்பாதைக்குக்கீழே டிப்பர், லாரிகள் மற்றும் உயரமான வாகனங்களை நிறுத்தக்கூடாது. இயக்கவும் கூடாது.

ஈரத்துணிகளை எர்த்கம்பியில் உலர்த்தக்கூடாது.

புதியகட்டுமானங்களை மின்பாதையருகே ஏற்படுத்தக்கூடாது.

விவசாயவிளைபொருட்களை பாதுகாக்க மின்வேலி அமைப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் .

மின்பாதையில் கொக்கிபோட்டு செய்யப்படும் மின்திருட்டு சிறை தண்டனைக்குரிய குற்றம் இவற்றை மின்நுகர்வோர் அறிந்து வாரியத்திற்கு ஒத்துழைப்புதருவதோடு மின் விபத்துக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது என மின் வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!