sportz பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ ஃ மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 23 விளையாட்டு விடுதிகள் மற்றும் 5 விளையாட்டுப் பள்ளிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் மாணவா;களுக்கான விளையாட்டு விடுதி மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், என்.எல்.சி.பள்ளி-நெய்வேலி, அரசு மேல்நிலைப்பள்ளி-புதூர்-சென்னை, செல்லம் மேல்நிலைப்பள்ளி-நாமக்கல் ஆகிய இடங்களிலும், மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள்,

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, நேரு உள்விளையாட்டரங்கம் – சென்னை, பாரதி வித்யாபவன் – திண்டல் – ஈரோடு, செல்வம் மேனிலைப்பள்ளி – நாமக்கல் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

மேற்காணும், விளையாட்டு விடுதிகளில் 2016-2017-ஆம் ஆண்டில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காக விளையாட்டுத்துறை சார்பாக இலவசமாக விண்ணப்பங்கள் 20.04.2016 வரை பெறப்பட்டது. மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 06.05.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2016-2017-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை வருகின்ற மே 5-ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது http://www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அந்தந்த மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர்களிடம் வருகின்ற 06.05.2016 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வமும் துடிப்பும் உள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

விளையாட்டு விடுதிகள் மற்றும் பள்ளிகளில் சேர்ந்து பயிற்சி பெற விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வு 07.05.2016 முதல் 09.05.2016 வரை கீழ்காணும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட விளையாட்டு அரங்குகளில் காலை 8.00 மணி முதல் நடைபெற உள்ளது.

07.05.2016 அன்று மதுரை, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, உதகமண்டலம், நாகப்பட்டினம், கரூர், சேலம், நாகர்கோவில், கடலூர், வேலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும்,

08.05.2016 அன்று திண்டுக்கல், சிவகங்கை, தர்மபுரி, திருப்பூர், திருவாரூர், புதுக்கோட்டை, ஈரோடு, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும், 09.05.2016 அன்று விருதுநகர், தேனி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சென்னை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டஙகளிலும் தேர்வு நடைபெறவிருக்கிறது.

மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலர்களிடமிருந்து அழைப்பு அஞ்சல் அட்டை கிடைக்கப் பெற்றாலும், கிடைக்கப் பெறவில்லை என்றாலும் மேற்காணும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கங்களுக்கு உரிய சான்றுகளுடன் சென்று மாவட்ட அளவிலான தேர்வில் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டில் ஆர்வமுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!