10 persons arrested for sand smuggling near Perambalur

பெரம்பலூர், பிம்பலூர் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) நல்லுசாமி வி.களத்தூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கல்லாற்றில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கொண்டு மணல் கடத்தப்படுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் அதிகாரி திஷா மிட்டல் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிம்பலூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது47), இவரது மகன் ஆனந்த் (25) ஆகியோர் கல்லாற்றில் டிராக்டர் வைத்து மணல் கடத்தியதும், மேலும் அவர்களுக்கு உடந்தையாக பிம்பலூரை சேர்ந்த பெரியசாமி(35), வி.களத்தூரை சேர்ந்த பிரகாஷ்(32), என்.புதூரை சேர்ந்த யாசின் (27), சதீஷ் (25), சிவா(30), சதீஷ்குமார்(32) ஆகியோர் செயல் பட்டதும் தெரியவந்தது.

இதேபோல் கல்லாற்றில் மாட்டு வண்டிகளை வைத்து பிம்லூரை சேர்ந்த சின்னதுரை(40), பிச்சைமணி(45) ஆகியோர் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்டுத்திய டிராக்டர் மற்றும் 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!