108 conch anointing at Perambalur Srinethira Vinayagar Temple!

பெரம்பலுார் இந்திரா நகரில், அருள்மிகு ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் நுாதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் அரசு-வேம்பு திருக்கல்யாணம் ஏப்., 3ம் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து, அருள்மிகு ஸ்ரீநேத்திர விநாயகர் மற்றும் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமிக்கு மண்டலாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.

விழாவில், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதனையடுத்து, மாலை 5 மணியளவில் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், கோவில் பூசாரிகள் முருகேசன் பிரபாகரன், , கோவில் நிர்வாகி சாந்தி, சீனிவாசன், பிரியங்கா மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர். விழாவில், பம்பை மங்கல வாத்தியம், கருப்புசாமி, அம்மன் ஆகிய சுவாமி வேடமணிந்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!