பெரம்பலூர் மாவட்டத்தில், பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வரும் ஜுலை 18 ம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம்
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:
நடைபெற்று முடிந்த மார்ச் 2016 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவ – மாணவிகள மற்றும் தனித் தேர்வர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ( Provisional Mark Certificate) 01.06.2016 அன்று பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டது.
இத்தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 29.08.2016 வரை செல்லத்தக்கதாகும். இருப்பினும் மாணவர்கள் நலன் கருதி பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 18.07.2016 (திங்கள் கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்த பள்ளியில் பயின்ற மாணவ – மாணவிகள் அந்தந்த பள்ளித் தலைமையாசிரியர் , முதல்வர்களிடம் பள்ளிக்கு நேரில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையத்திற்கு சென்று அசல் மதிப்பெண் சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.