10th public examinations in the district write 9.764 persons, Tomorrow

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல் :

தமிழகமெங்கும் நாளை (மார்ச்-8) 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 136 பள்ளிகளைச் சேர்ந்த 9,764 மாணவ-மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர். இதில் 4,519 பேர் மாணவிகள், 5,245 பேர் மாணவர்கள் ஆவர்.

32 மையங்களில் அரசுப் பொதுத் தேர்வு நடைபெறவுள்ள, இத்தேர்வு மையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் வினாத்தாள்களை கொண்டுசெல்லும் வகையில் 9 வழித்தட அலுவலர்களும், 70 பேர் பறக்கும் படையினராகவும், 555பேர் தேர்வுக் கூட கண்காணிப்பாளர் பணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

நாளை (8.3.2017) தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 30.3.2017 அன்று முடிவடையவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!