1690 people wrote olympiad exam in Perambalur Almighty Vidyalaya School
பெரம்பலூர் – சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் நடத்தப்பட்ட திறனறித் தேர்வில் 1690 பேர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி (சிபிஎஸ்இ) மற்றும் டெல்லி பாட்ஸ் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் ஒலிம்பியாட் எனும் பள்ளி மாணவ மாணவிகளின் திறனறித் தேர்வு நடத்தி வருகிறது.
மூன்றாவது ஆண்டாக, இன்று, நடைபெற்ற இத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆயிரத்து 690 மாணவ மாணவிகள் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வில் கலந்து கொண்டனர்.
பள்ளி தாளாளர் ஆ.ராம்குமார் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் டாக்டர் சிவகாமி முன்னிலை வகித்தார்.
ஒலிம்பியாட் லெவல் 1 தேர்வில் பங்கேற்று தேர்வெழுதியவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 30 பேரை தேர்வு செய்து பின்னர், லெவல் 2 தேர்வு வரும் 18.2.2018 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.
இரு தேர்விலும் கலந்து கொண்டு முதல் மதிப்பெண் பெறுபவருக்கு முதல் பரிசாக ஆப்பிள் ஐ பேடும், இரண்டாம் பரிசாக 9 பேருக்கு டாப்பெர் வாட்ச் மற்றும் முன்றாம் பரிசாக அறிவியல் சார்ந்த டிக்ஸ்னரி மற்றும் வெற்றி பெறும் அனைவருக்கும் சான்றிதழும் பிப. 24 அன்று நடைபெறும், பள்ளி ஆண்டு விழாவில் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பெற்றோர்கள் ஊக்குவிப்பு பயிற்சியாளர் வைரமணி ஒலிம்பியாட் தேர்வு குறித்து சிறப்புரையாற்றினார்.
பள்ளி துணைமுதல்வர் சாரதா செந்தில்குமார் மற்றும் பங்குதாரர்கள் மோகனசுந்தரம், சங்கீதாமுத்துக்குமார், கோபிநாத் மற்றும் பள்ளி ஆசிரியைகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.