2 hour question paper delay: Exams started late for primary school students by around 1.30 hours!

மாநில அளவில், தொடக்கப்பள்ளி வகுப்புகளான 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடந்து வருகிறது. அதற்கான வினாத்தாள்களும் மாநிலம் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இன்று காலை 8 மணிக்கு வழங்கடப் வேண்டிய வினாத்தாள்கள் இன்று மாநிலம் முழுவதும் தாமதமாக சுமார் 10.15 மணிக்கு வழங்கப்பட்டது. இதனால், பெரம்பலூர் சுற்று வட்டரா கிராமப் புறத்தில் இருந்து வந்த ஆசிரியர்கள் வினாத்தாள்கள் பெற காத்து கிடந்து பெற்று சென்றனர். மேலும், இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் 11 மணிக்கு பின்னரே தொடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

சிறுவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் கூட போது அதிகாரிகள் தரப்பியல் அக்கறையின்மையை காட்டுகிறது. வினாத்தாள் வழங்குவதில் முறையான நடைமுறையயை பின்பற்றவேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!