2016 – 2017 teachers per year in General transfer / counseling for promotion the post tomorrow (Aug. 6) going on in In Perambalur

teachers-day பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்துள்ளதாவது:

2016 – 2017ஆம் ஆண்டிற்கு ஆசிரியர்கள் பொதுமாறுதல் / பதவி உயர்விற்கான கலந்தாய்வு நாளை 06.08.2016 முதல் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் துறையூர் சாலையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது.

அதன்படி 06.08.2016 அன்று அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வும்,

07.08.2016 அன்று அரசுமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந்தாய்வும,

13.08.2016 அன்று அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வு பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில காலை 9.00 மணி முதல் நடைபெறும்.

20.08.2016 அன்று முதுகலை – கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர்- மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

21.08.2016 அன்று முதுகலை, கணினி, வேளாண்மை தொழிற்கல்வி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வும்,

22.08.2016 அன்று பட்டதாரி ஆசிரஜயர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்விற்கான கலந்தாய்வும்,

23.08.2016 அன்று இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

24.08.2016 அன்று இநிஆ, உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

27.08.2016 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் – பணிநிரவல் கலந்தாய்வும்,

03.09.2016 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வும்,

04.09.2016 அன்று பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கலந்தாய்வும்,

06.09.2016 அன்று இநிஆ – உடற்கல்வி, தையல், ஓவியம், இசை சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு உள்ளிட்டவைகளுக்கான கலந்தாய்வு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் நடைபெறும என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!