2474 women in Perambalur district have applied for AMMA Two-wheeler Scheme

பெரம்பலூர் மாவட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பணிக்கு செல்லும் சிரமத்தை குறைக்கும் வகையிலும், பெண்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அம்மா இரு சக்கர வாகன திட்டம் அறிவித்திருந்தார்.

தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு செய்து பயனாளிகள் தேர்விற்கு அறிவிப்பு செய்துள்ளது.

அதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று வரை 5032 மனுக்கள் வினியோகம் செய்யப்பட்டு, 2474 மனுக்கள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கப்பட்டது.

நகர்புறத்தில் இருந்து 777 மனுக்களும், ஊர்ப்புறங்களில் இருந்து 1697 மனுக்களும் பெறப்பட்டது.

ஆலத்தூர் ஒன்றியத்தில் இருந்து 351 , பெரம்பலூர் ஒன்றியத்தில் 431, வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 473, வேப்பூர் ஒன்றியத்தில் 442 மனுக்களும், பெரம்பலூர் நகராட்சியில் 538 பேரும், குரும்பலூர் பேரூராட்சியில் 79 பேரும், பூலாம்பாடி பேரூராட்சியில் 28 பேரும், அரும்பாவூர் பேரூராட்சியில் 84 பேரும், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 48 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!