25 pound jewelry at the house in Perambalur, Rs. 10 thousand cash theft! Police investigation
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் – நான்கு ரோடுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் நகராஜன் (வயது 62), ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவர் இன்று அவருடைய மாமியார் பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் இறந்து போனதற்காக துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவருடைய மனைவி ஆண்டாளுடன் நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார். இன்று நண்பகலில் வந்து வீட்டை திறந்து பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்து 25 பவுன் நகை , மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம், 2.5 கிலோ வெள்ளி பொருட்களையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு சுமார் 9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப்பதிவு செய்து தீவிரமாக கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் திருட்டு குற்றங்கள் நாள் தோறும் அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.