3 arrested in the Act Puzhal, Perambalur Renegades Goondas blockage in jail!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவின் பேரில் பொதுமக்களை தாக்கி தொல்லை கொடுத்த 3 ரவுடிகள் குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, பெரம்பலூர் துறைமங்கலம் கே.கே நகர் பகுதி மக்களுக்கும், அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கொண்டு அட்டகாசம் செய்ததில் பொதுமக்கள் மீது ரவுடிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் போலீஸ் எஸ்.பி வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த ராமநாதன் மகன் ரவிகரன் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் தம்பா (எ) யேசுதாஸ், மற்றும் அதே பகுதியை சேர்ந்த சற்குணராஜாவின் மகன் நகுலேஸ்வரன் ஆகியோரரை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவின் பேரில் மூன்று பேரையும், சென்னை அருகே உள்ள புழல் சிறையில் அடைத்தனர்.