3 men arrested claimed the woman’s cellphone in Namakkal: police
நாமக்கல்லில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் ஆண்டவர் நகரை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மனைவி ஜமுனா(32). இவர் நேற்று முன்தினம் எஸ்.கே நகர் பஸ் ஸ்டாப்பில் இருந்து, செல்போனில் பேசிக்கொண்டே, வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3பேர் அவரை வழிமறித்து, விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து ஜமுனா அளித்த புகாரின் பேரில், நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஜமுனாவிடம் செல்போன் பறித்துச்சென்ற சேந்தமங்கலம், பட்டத்தையன்குட்டையை சேர்ந்த சஞ்சீவ்(23), மாவடித் தெருவை சேர்ந்த மாரிமுத்து (22) மற்றும் 18 வயது வாலிபர் ஒருவர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.