3 months ago, the producers petitioned the collector to demand payment for purchases made milk
93 நாட்காளாக கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கு உரிய தொகை வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் பால் உற்பத்தியாளர்கள் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் கூட்டுறவு பண்ணை மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கு உரிய தொகையை 90 நாட்கள் கடந்தும் வழங்காமல் காலம் தாழ்த்தி வருதாக குற்றம் சாட்டி அக்கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியானர்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கடந்த 92 நாட்களாக கொள்முதல் செய்யப்பட்ட பாலிற்கு உரிய வழங்காமலும், அதற்குரிய தொகை மாற்று வழியில் வங்கியிலோ செலுத்தப்படவில்லை. இதுகுறித்து பல முறை சங்க நிர்வாகிகளிடம், முறையிட்டும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விவசாயத்தின் உப தொழிலாளான பால் உற்பத்தியில் செய்து வரும் தங்களுக்கு விவசாயத்திலும், ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளதால், குடும்ப மற்றும் விவசாய செலவுகளுக்கு பால் பட்டுவாட பணத்தை நம்பி உள்ளதாகவும், அதை உடனே வழங்க நடவடிக்கை கோரியும் மனு கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் ஒரு வார காலத்திற்கு உரிய விசாரணை நடத்தி வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.