345 petitions demanding various demands from the Perambalur collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை தோறும் நடக்கும் பொதுமக்கள் குறைத் தீர்க்கும் இன்று நடைபெற்றது. அதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதி மக்கள் 345 பேர் கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
தண்ணீர் பிரச்சனை
வாலிகண்டபுரம் கிராம மக்கள் முறையான தண்ணீர் வினியோகம் செய்ய கோரி மனு திரளாக வந்து மன கொடுத்தனர்
ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு
லாடபுரம் கிராம் 7வது வார்டு அருகே செல்லும் நீர்வரத்து வாய்க்காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாகவும், அதனை அகற்றக் கோரி மனு கொடுத்தனர்.
வீணாகும் தண்ணீர்
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள தனியார் உணவு விடுதி அருகில் தண்ணீர் குழாய் உடைந்து நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் அளவு தண்ணீர் வீணாகி வருவதாகவும், நகராட்சி ஆணையரிடம் தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் கொடுத்தனர்.
அஞ்சலகத்தில் வைப்பு நிதியை பெற்றுத் தர கோரி மனு
பெரம்பலூர் அஞ்சலகத்தல் முதலீடு செய்யப்பட்ட பணம் முதிர்வு காலம் முடிந்தும் திரும்ப வழங்கப்படாமல் அலைக்கழிப்பதாக கூறி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.