38 persons arrested for the first time in Tamilnadu club in secret gambling near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா மங்களமேடு அருகே உள்ள எறையூர் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் மானிய நிலத்தை பிம்பலூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.

இந்த குத்தகை நிலத்தில் குத்தகைதாரரான சுப்பிரமணியனும், திருச்சியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரும் சேர்ந்து அலுமினிய சீட்டில் கொட்டகை அமைத்து கடந்த சில நாட்களாக சீட்டாட்ட கிளப் நடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மங்களமேடு மற்றும் வி.களத்தூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர்கள் நான்கு பேர் இன்று அதிகாலை சம்மந்தப்பட்ட இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் பாண்டிச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38 பேர் லட்சக்கணக்கான ரூபாய் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சூதாட்டத்தில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் ரொக்க பணம் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 38 பேரையும் கைது செய்து, மங்களமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதனையறிந்த பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில வழக்கறிஞர்களும்ஆளும் கட்சி, எதிர் கட்சி முக்கிய பிரமுகர்களும், தொழிலதிபர்களும் என பல்வேறு தரப்பினர் சூதாட்ட கும்பலை கைது செய்ய வேண்டாமென்றும், காவல் நிலைய பினையில் விட வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறோம் பேசியுள்ளனர்.

இதனையடுத்து –, மங்களமேடு போலீசார் 38 பேரையும் காவல் நிலைய பினையில் சற்றுமுன் விடுவித்தனர்.

இது போன்ற பெரிய அளவிலான சூதாட்ட கும்பல் தமிழகத்தில் முதல் முறையாக 38 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்ட போதிலும் முக்கிய புள்ளிகள் தலையீட்டால், மங்களமேடு போலீசார் குற்றவாளிகளை பினையில் விடுவித்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!