4 members of the same family have committed suicide due to family dispute near Namakkal

நாமக்கல் நகராட்சி துப்புரவு தொழிலாளி மனைவி, மகள் 4 பேர் தற்கொலை முயற்சி: போலீஸார் தீவிர விசாரணை

குடும்ப பிரச்சினை காரணமாக நாமக்கல் நகராட்சி துப்புரவு தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது மகள் 3 பேர் அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். நான்கு பேரும் உடனடியாக மீட்டுக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் அடுத்த சிவியாம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்த வனராஜ்(56). இவர் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி மற்றும் கீதா (20), புனிதா (17),தேன்மொழி (14) என. 3 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே கடந்த சில தினங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று மாலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த வனராஜ், மனைவி மகாலட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த மகாலட்சுமி தனது 3 மகள்களான கீதா,புனிதா, தேன்மொழி ஆகியோருக்கு அரளி விதையை அரைத்துக் கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் மகாலட்சுமி, அவரது மகள் 3பேரும் மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், 4பேரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக சேந்தமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தாய், மகள்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!