4 times petition requesting drinking water: The importance of the luxury of the rulers!

பெரம்பலூர் அருகே உள்ள கோரையாறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி, 4 முறையாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டைமாந்துறை ஊராட்சிக்கு உட்பட்டது கோரையாறு கிராமம், இந்த கிராமத்தில் இன்று 4 வது முறையாக போதுமான குடிநீர் கிடைக்காததால் கடும் அவதிப்படுவதாகவும், பள்ளி மாணவர்கள், மற்றும் நோயாளிகள் தண்ணீர் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளதாகவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஆழ்குழாய் அல்லது கிணற்றை ஆழப்படுத்துதல் போன்ற ஏதாவது மாற்றுப் பணிகள் செய்து குடிநீர் தேவையை தீர்த்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால், வழக்கம் போல் அவர்களுக்கு மீண்டும் அதே வந்து பாக்கிறோம் என கூறி திருப்பி அனுப்பி வைத்தனர். கடந்த ஆறு மாதத்தில் 4 முறை மனு கொடுத்துள்ளனர்.

அரசியல் சாசனப்படி பொதுமக்களுக்கு அடிப்பைடை வசதிகளை செய்து தருவது அரசின் அத்தியாவசிய பணி ஆகும், ஆனால், தமிழக அரசு ஆடம்பர செலவுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

பல கோடி திட்டங்களை கையில் எடுத்தால், அதில் அதிக கமிசன் கிடைக்கும், ஆனால், குடிநீர் குழாய்கள் அமைப்பது, உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை எடுத்தால் நாட்கள்தான் நகரும், குறைந்தளவு கமிசன் கிட்டும் என்பதால் மக்கள் நலத்திட்டங்களை கையில் எடுப்பதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!