40% government subsidy to set up solar power for houses: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் மூலம் மரபுசாரா எரிசக்தியினை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம் வீடுகளின் மேற்கூரையில் நிறுவுவதற்கு அரசு நிர்ணயம் செய்த தொகையிலிருந்து 40 சதவிகித மானியம் வழங்கிட அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சக்தி சாதனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது வீடுகளின் உபயோகத்திற்கு போக மீதமுள்ள மின்சாரமானது மின்வாரிய கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது.

இவை அனைத்தும் நிகர அளவி மூலம் கணக்கிடப்படுவதால் மின் கட்டணம் குறைக்கப்படுகிறது. எனவே அதிகமாக மின்கட்டணம் செலுத்தும் அனைத்து குடும்பதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் சூரிய மின்சக்தி சாதனம் அமைத்து தங்களது மின்செலவினங்களை குறைத்து பயன்பெறலாம். இது தொடர்பாக விவரங்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவிப்பொறியாளரை 9385290524 தொலைபேசி எண் வாயிலாகவும், நேரிலும் அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!