VCK 50 ஆண்டும் காலம் திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தது போதும் ஒரு முறை விசிக வாய்ப்பளியுங்கள் மாற்றம் தருகிறோம் எனக்கூறி ஆலத்தூர் ஒன்றித்தில் விசிக வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பு.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க.-த.மா.கா.-மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளரும் வேட்பாளருமாகிய முகமது ஷா நவாஸ் ஆலத்தூர் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குன்னம் சட்டமன்ற தொகுதி பின்தங்கிய நிலையில் உள்ளது. இங்கு ஓரிரு கல்லூரியை தவிர வேறு கல்லூரிகள் இல்லை. கிராமங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவியர்களும் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கி படை எடுக்கும் நிலை ஏற்பட்டுவருகிறது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் கல்வி சரிவர போதிக்கப்படவில்லை. அரசு பள்ளிகள் தரமற்று இயங்கிவருகிறது இந்த தொகுதியில் கல்வி, கட்டமைப்பு வசதிகள்,வேலைவாய்ப்பிற்கு தொழிற்கூடங்கள் இல்லை.

விவசாயிகளும் எவ்வித வசதிகளும் இன்றி அடித்தள மட்டத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். 50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மக்களிடையே வாழ்வாதார மாற்றம் ஏற்படவில்லை. எனவே இந்த தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு முறை விசிக வேட்பாளராகிய (தனக்கு) முகம்மது நவாஸிற்கு மோதிரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர், அருணகிரிமங்கலம், திம்மூர், சில்லக்குடி, காரைப்பாடி, மேத்தால், ரசுலாபுரம், மாக்காய்குளம், ராமலிங்கபுரம், ஜமீன் ஆத்தூர், பாலம்பாடி, தொண்டப்பாடி, இலந்தங்குழி, சீராநத்தம், கூத்தூர், பிலிமிசை, இலுப்பைக்குடி, சாத்தனூர், சா.குடிக்காடு, கூடலூர், ஜமீன்பேரையூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், மேலஉசேன்நகரம், கீழ உசேன் நகரம், தங்கநகரம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் சிபிஐ மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், சிபிஎம் மாவட்டக் குழு பி.ரமேஷ், விசிக பொருப்பாளர்கள் தங்கதுரை, மாநில துணை செயலாளர் வீர.செங்கோலன், மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம், மாவட்ட பொருளாளர் கலையரசன், வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், தேமுதிக ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் பொன்.சாமிதுரை, மற்றும் விசிக பிரமுகர்கள் மெய்யன், மன்னர்மன்னன், இளமாறன், தமாக பொருப்பாளர்கள் செல்வகுமார் வரகுபாடி ராஜேந்திரன், காரை சுப்ரமணியன், உள்பட மதிமுக தேமுதிக, தா.ம.க., ஏராளமானோர் உடன் சென்று இருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!