50 percent subsidy to fishermen net of glass fiber and coracle: perambalur collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 50 சதவீதம் மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2017-18 ஆம் ஆண்டிற்கு மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பாpசல்கள் வாங்கிட 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் என மீன்வளத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிருவாக சீர்திருத்ததுறை அமைச்சரால் சட்ட பேரவையில் மீன்வளத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி 2017-18 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 16.62 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
பங்கு மீனவர்கள், முழுநேர உள்நாட்டு மீனவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களுக்குள் வலைகள் மற்றம் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 20.11.2017க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை (அறை எண்: 234, இரண்டாவது மேல்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரியிலும், 04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!