500, thousand notes declaration that they will not : Human Resources Ministry official inspection
500, மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பெரம்பலூரில் இன்று இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச்செயலாளர் பிரவீன்குமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வியாபரிகள், பெரும் வணிகர்கள், விவாசாயிகள், வங்கிகள், வங்கி வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் 500, மற்றும் ஆயிரம் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார். இது ஆய்வு சமர்ப்பிக்க நேற்று தஞ்சை சென்றிருந்த அவர் இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், பொம்மனப்பாடி கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களிடையே கருத்துகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் நந்தக்குமார் உடன் இருந்தார். இந்த கருத்துக்களை நாளை மறுநாள் மத்திய அரசுக்கு இந்த கருத்துகள் அனுப்பி வைக்க உள்ளதாக தெரிகிறது.