6-day training camp discussing techniques for self-employment

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்;கிராமிய சுயவேலை வாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகம் (தாட்கோ) இணைந்து நடத்தும் தொழில் முனைவோர்க்கான 6 நாள் பயிற்சி இன்று பெரம்பலூர் சங்குப்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் தொழில் முனைவோர்களுக்கான நல்ல பண்புகள் பற்றியும், தொழிலை லாபகரனமாகதாக மாற்றும் நுணுக்கங்கள் பற்றியும் தொழில் முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், இந்திய பணம் இல்லா பரிவர்த்தனை விழிப்புணர்வு முறைகளை பற்றியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில் முனைவோர் அவசியம் பின்பற்ற வேண்டிய நேரம் மேலாண்மை, பணத்தை எவ்வாறு முறையாக செலவு செய்வது, வரவு செலவுகளை எவ்வாறு முறையாக பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்களும், உற்பத்தி பொருட்களை எவ்வாறு சந்தைப்படுவது என்பது குறித்தும் இந்த ஆறு நாட்கள் பயிற்சியில் விரிவாகவும் தெளிவாகவும் சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களால் எடுத்துரைக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயிற்சி குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!