647 cases in Perambalur settled by National People’s Court!

சட்ட பணிகள் ஆணை குழுக்களின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.பல்கிஸ் தலைமையில் நடந்தது. எஸ்.சி – எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி எஸ்.மலர்விழி, குடும்ப நல நீதிபதி ஏ.தனசேகரன், தலைமை நீதித்துறை நடுவர் .எம்.மூர்த்தி, சார்பு நீதிபதி எல்.சகிலா, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி ஆர்.லதா, முதன்மை மாவட்ட உரிமையியல் எம்.ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.மகாடிலட்சுமி, நீதித் துறை நடுவர்கள் பி.சுப்புலட்சுமி, ஆர்.சங்கீதா சேகர், ஜி.முனிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள 647 வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டுள்ளது. 76 வங்கி வழக்கில்ரூ.81,62,400-ம் 25 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1,10,28,100-ம், 14 சிவில் வழக்குகளில் ரூ1,84,36,958-ம் 531 சிறு குற்ற வழக்குகளில் ரூ.5,10,200-ம் 1 குடும்ப நல வழக்கும் (தம்பதியர் இணைந்தனர்) ஆக மொத்தம் 647 வர்க்குகளில் ரு:.3 கோடியே81 லட்சத்து 37 ஆயிரத்து 658-க்கு தீர்வு காணப்பட்டது. மேற்படி மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் பார் அசோசியசன் சங்க செகரட்டரி எம்.சுந்தரராஜன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே. திருநாவுக்கரசு, ஏ.அருணன், ஆர்.மணிவண்ணன், எம்.கருணாநிதி மற்றும் இதர வழக்கறிஞர்கள், காவல் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வழக்காடிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குபு அலுவலர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!